கள்ளக்குறிச்சி: பலே பெண் ஆசாமி கைது...

சின்னசேலத்தில் கவரிங் செயினை வைத்துவிட்டு தங்க நகையை திருடிய பெண்வாடகைக்கு வசித்த வீட்டில் கைவரிசை;

Update: 2026-01-23 07:43 GMT
சின்னசேலத்தில் கவரிங் செயினை வைத்துவிட்டு தங்க நகையை திருடிய பெண்வாடகைக்கு வசித்த வீட்டில் கைவரிசை சின்னசேலம் மூங்கில் பாடி சாலையில் உள்ள ராமச்சந்திரா நகரில் வசித்து வருபவர் பெருமாள் மனைவி பாக்கி யம் (வயது 62). இவர் தனது வீட்டு சாமி அறையில் ஒரு டப்பாவில் 6 பவுன் செயின்½ பவுன் மோதிரம் மற்றும் வெள்ளி கொலுசு ஆகிய வற்றை வைத்திருந்தார். இந்த நிலையில், அவரது 6 பவுன் செயினை மட்டும் யாரோ திருடிச்சென்றுவிட்டு, அதற்கு பதிலாக கவரிங் நகையை வைத்து சென்றுள்ளனர். டப்பாவில் நகையை வைத்து இருப்பது பற்றி அறிந்த யாரோ தெரிந்த நபர் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க கூடும் என்றும், தனது வீட்டில் வாட , கைக்கு குடியிருந்த கச்சிராயப்பாளையம் அடுத்த பரிகம் கிராமத்தை சேர்ந்த சடையன் மனைவி அமுதா (30) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக பாக்கியம் சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், 6 பவுன் செயினை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News