விசில் சின்னம் வழங்கியதையடுத்து தவெகவினர் கொண்டாட்டம்,காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் விசில் சின்னம் வழங்கியதையடுத்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழகத்தினர் கொண்டாடி வருகின்றனர்.;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2026-01-23 12:10 GMT
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் அக்கட்சியினர் விசில் சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நாமக்கல் பூங்கா சாலையிலிருந்து ஊர்வலமாக சென்று பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதனையடுத்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சின்னமான விசில் சின்னத்தை கழுத்தில் மாட்டி விட்டு இனிப்பு வழங்கி வரும் 2026 ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் விசில் சின்னத்திற்கு ஆதரவு கேட்டனர். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தினர் பலர் கலந்து கொண்டு விசில் அடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்