விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு!

தூத்துக்குடியில் மோட்டார் பைக் மீது கார் மோதிய விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க சிறப்பு மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது.;

Update: 2025-04-13 03:01 GMT
விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு!
  • whatsapp icon
தூத்துக்குடியில் மோட்டார் பைக் மீது கார் மோதிய விபத்தில் காயம் அடைந்தவருக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க சிறப்பு மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டது. தூத்துக்குடியில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்படி தூத்துக்குடியை சேர்ந்த துரைசிங் என்பவர், தூத்துக்குடி 4-ம் கேட் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்த போது கார் மோதி படுகாயம் அடைந்தார். இதனை தொடர்ந்து அவர் நஷ்டஈடு கோரி தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு சிறப்பு மக்கள் கோர்ட்டில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. விசாரணைக்கு பிறகு, துரைசிங்குக்கு ரூ.1 கோடியே 14 லட்சத்து 6 ஆயிரத்து 486 நஷ்ட ஈடு தொகை வழங்க முதன்மை நீதிபதி வசந்தி உத்தரவிட்டார். இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், மூத்த உரிமையியல் நீதிபதி கலையரசி ரீனா மற்றும் வக்கீல்கள் ரெங்கநாதன், குருசாமி, பால்ஆசீர் ஆகியோர் ஆகினர்.

Similar News