ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆன்லைன் உணவு டெலிவரி இல்லை! நாமக்கல் நகர மற்றும் தாலுக்கா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

Zomota மற்றும் Swiggy உடன் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை எனில் ஜூலை 1 முதல் காலவரையற்ற ஆன்லைன் வர்த்தகம் நிறுத்தி வைக்கப்படும் என்று நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக அறிவிப்பு;

Update: 2025-06-23 14:30 GMT
ஹோட்டல்களில் இருந்து வாங்கி ஆன்லைன் வழியே உணவு விற்பனை செய்யும் பெரும் நிறுவனங்கள், ஹோட்டல் உரிமையாளர்களுக்கு கட்டுபடியாகும் விலையை கொடுக்க வேண்டும்., இல்லையென்றால் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஆன்லைன் நிறுவனங்களுக்கு உணவு விற்பனை செய்வது நிறுத்தப்படும் என்று நாமக்கல் நகர மற்றும் தாலுகா ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். நாமக்கல்லில் நகர மற்றும் தாலுக்கா ஹோட்டல், பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக அதன் தலைவர் இராம்குமார், செயலாளர் அருள்குமரன் பொருளாளர் விக்னேஷ் ஆகியோர் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நாமக்கல் சேலம் சாலையில் உள்ள குமரன் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் ஹோட்டல்களில் இருந்து உணவுப் பொருட்களை வாங்கி ஆன்லைன் வழியாக விற்பனை செய்யும் பெரும் நிறுவனங்கள், விளம்பரம் உள்ளிட்ட பல்வேறு மறைமுக கட்டணங்களை அந்த ஹோட்டல் உரிமையாளர்களிடம் வசூலித்து வருகின்றனர். இதனால் ஹோட்டல் தொழில் பெரிதும் பாதிக்கப்படுகிறது.மேலும், உணவு விற்பனைக்கான உரிய தொகையை, உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாமக்கல் நகர மற்றும் தாலுகா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் இராம்குமார் மற்றும் செயலாளர் அருள்குமரன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது....
ஆன்லைனில் zomota மற்றும் Swiggy ஆகிய பெரும் நிறுவனங்கள் ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு மாதிரி கமிஷன் பெறுகின்றார்கள்.நாமக்கல் தாலுக்காவில் மட்டும் 85 கடைகள் ஆன்லைன் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தினமும் 10 லட்சம் மதிப்பில் ஆன்லைனில் உணவு பொருள் வியாபாரம் நடைபெறுகிறது.*Zomota மற்றும் Swiggy உடன் பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை எனில் ஜூலை ஒன்றாம் தேதி முதல் காலவரையற்ற ஆன்லைன் வர்த்தகம் நிறுத்தி வைக்கப்படும் என்று ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தெரிவித்தனர்..தொடர்ந்து, ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு விதமான கமிஷன் வித்தியாசம் இருப்பதாகவும், மேலும், ஒரு வாரம் கழித்து தான் கடை உரிமையாளருக்கு பணம் வரும் நிலையில் அந்த வியாபாரம் நிலைப்பாட்டை பார்க்கும்போது ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.எனவே இந்த பெரும் நிறுவனங்கள் நாமக்கல் நகர மற்றும் தாலுக்கா ஹோட்டல் உரிமையாளர்களாகிய எங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இல்லையெனில் வருகின்ற ஜூலை ஒன்றாம் தேதி முதல் அந்த நிறுவனங்களுக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்வது இல்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தனர்.இந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் நாமக்கல் நகர மற்றும் தாலுக்கா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர் பாலசங்கர்,இணை செயலாளர் புஷ்பராஜ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News