வாணியம்பாடியில் இரண்டாவது நாளாக 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை..
வாணியம்பாடியில் இரண்டாவது நாளாக 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை..;
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இரண்டாவது நாளாக 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை.. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி.. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்த நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வாணியம்பாடி அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாவது நாளாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையானது நியூடவுன், செட்டியப்பனூர் கிரிசமுத்திரம் வளையாம்பட்டு, மேட்டுப்பாளையம், கச்சேரி சாலை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் ஆம்பூர் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.. இரண்டாவது நாளாக பெய்து வரும் மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர் மேலும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.