சிவன்மலை அரசம்பாளையத்தில் ரூ.1லட்சம் மதிப்பிலான 11 ஆடுகள் பலி - தொடரும் சோகம் விவசாயிகள் பாவம் 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலை அருகே உள்ள அரசம்பாளையம் ராமசாமியின் தோட்டத்தில் மேய்த்து கொண்டிருந்த ஆடுகளில் 11 ஆடுகளை நாய்கள் கடித்து குதறியது. இறந்த ஆடுகளின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ;

Update: 2024-12-08 15:22 GMT
காங்கேயம் சிவன்மலை அடுத்துள்ள அரசம்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் விவசாயம் செய்து கொண்டு கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இவரின் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த 27 ஆடுகளில் 12 செம்மறி ஆடுகளை நாய்கள் துரத்தி துரத்தி கடித்தது அதில் 4 பெரிய ஆடுகள் 7 குட்டி ஆடுகள் பலியாகியது. இதன் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சம் இருக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் 3 ஆடுகள் படுகாயத்துடன் உள்ளது. தொடர்ந்து காங்கேயம் பகுதிகளில் ஆடு,மாடு போன்ற கால்நடைகள் நாய்களிடமிருந்து காப்பாற்றுவதில் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் இறந்த ஆடுகளுக்கு இழப்பீடு கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்திய போதிலும் மாவட்ட ஆட்சியர் 45 நாட்கள் கால அவகாசம்   கேட்டுள்ள நிலையில் பட்டப்பகலில் ஆடுகளை நாய்கள் கடித்து கொன்றது இப்பகுதியில் விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒன்று நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் இல்லை என்றால் இறக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கள்ளச்சாராயம் குடித்து இறந்த குடுபங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கும் அரசு விவசாயிகள் அல்லது விவசாயி வளர்க்கும் கால்நடை இறந்தால் இழப்பீடு வழங்குவது இல்லை என குற்றச்சாட்டு எழுப்புகின்றனர்.

Similar News