சேலம் இரும்பாலை அருகே உள்ள மாரமங்கலத்துப்பட்டி மோகன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மனைவி சோபனா. இவர் கடந்த மாதம் 8-ந் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் வெளிப்புற கேட்டை பூட்டி விட்டு மகளுடன் சென்னை சென்றார். நேற்று முன்தினம் அவர் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோதுபீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த தங்க காசுகள், 10 பவுன் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது, இதுகுறித்து அவர் இரும்பாலை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.