போட்டா- ஜியோ சார்பில் 10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கைய ஆர்ப்பாட்டம் சற்று முன் நடைபெற்றது.

போட்டா- ஜியோ சார்பில் 10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கைய ஆர்ப்பாட்டம் சற்று முன் நடைபெற்றது.;

Update: 2025-04-03 13:01 GMT
போட்டா- ஜியோ சார்பில் 10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கைய ஆர்ப்பாட்டம் சற்று முன் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் 10 அம்ச கோரிக்கையில் வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் சற்று முன் கூட்டமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் பாரதிதாசன், மணிகண்டன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது தமிழ்நாடு அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியின் படி காலம் தாழ்த்தாமல் பங்களிப்பு ஓய்வூதியம் திட்டத்தினை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளிலும் உள்ள பல பிரிவு காலி பணியிடங்களையும் நிரப்பி பதவி உயர்வுகளையும் வழங்கிட வேண்டும். அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு பழைய நிலையிலேயே உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். மேலும், மாநில முன்னுரிமை எனக்கூறி வெளியிட்டுள்ள அரசாணை எண் 243 திருத்தம் செய்து மாவட்ட அளவில் முன்னுரிமை வழங்க வேண்டும். மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி மற்றும் 12,527 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர் திறக்க தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Similar News