ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு இரண்டு சட்டப்பிரிவுகளில் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை:- மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு;
:- மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயில் ரயிலடி தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் கதிரவன் என்பவர் 2019-ஆம் ஆண்டு, ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து, 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தாய் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் போக்ஸோ வழக்கு பதிவு செய்து கதிரவனை கைது செய்தனர். மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை புதன்கிழமை முடிவடைந்த நிலையில், நீதிபதி விஜயகுமாரி கதிரவனை குற்றவாளி என தீர்மானித்து, அவர் சிறுமியிடம் பாலியல் குற்றம் புரிந்தமைக்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதமும், சிறுமியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து குற்றம் புரிந்தமைக்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000 அபராதமும் விதித்தும் ஆக மொத்தம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டுமென தீர்ப்பளித்தார். இதையடுத்து, கதிரவன்(31) கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.