விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் வைக்கப்பட்ட சிலைகள் நேற்றும் இன்றும் நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இன்று 31ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் கன்னியாகுமரி, மண்டைக்காடு, திற்பரப்பு, மிடாலம், தேங்காபட்டணம், குழித்துறை தாமிரபரணியாறு உள்ளிட்ட இடங்களில் 10 இடங்களில் இன்று மாலை விசர்ஜனம் செய்யப்பட உள்ளன. சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள் .