தஞ்சாவூரில் கண்ணாமூச்சி விளையாடியபோது மாடியிலிருந்து கீழே விழுந்த 10 வயது சிறுமி உயிரிழப்பு
கிரைம்;
தஞ்சாவூரில் கண்ணாமூச்சி விளையாடியபோது மாடியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த 10 வயது சிறுமி, சிகிச்சை பலனின்றி இறந்தார். தஞ்சாவூர் கீழவாசல் கவாஸ்காரத் தெருவைச் சேர்ந்த மைதீன். கூலித் தொழிலாளியான இவரது மகள் உமர்பர்தியானா(10). இவர் தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தோழிகளோடு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது முதல் மாடியில் விளையாடும் போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சிறுமியை உடனடியாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சிறுமி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.