புளியம்பட்டி அருகே 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

புளியம்பட்டி அருகே 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

Update: 2024-09-03 14:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
புளியம்பட்டி அருகே 100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி ஊராட்சி சேர்ந்த புதுரோடு, அண்ணா நகர், சின்ன வாய்புதூர், ஏரப்பா நாயக்கன் பாளையம், பெரிய சாத்தனூர், செட்டிபுதூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 2 மாதங்களுக்கு முன்பு 500 பேர் 100 நாள் வேலை கேட்டு மனுக்கள் அளித்தனர். இந்த நிலையில் மக்களுக்கு இன்னும் 100 நாள் வேலை கொடுக்கவில்லை என்று பொது மக்கள் மக்கள் ஊராட்சி மன்ற அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி கணேஷ் ஆகியோர் தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் உடனடியாக வேலை தருவதாக தொழிலாளர்கள் மத்தியில் உடன்படிக்கை ஏற்பட்டு உறுதி அளித்ததால் தொழிலாளர்கள் அங்கிருந்த பேச்சுவார்த்தயில் கலைந்து சென்றனர்.

Similar News