ராசிபுரம் அருகே ஊராட்சியை, நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்...
ராசிபுரம் அருகே ஊராட்சியை, நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியுடன், பட்டணம்(பேரூராட்சி) சந்திரசேகரபுரம், கோனேரிப்பட்டி, கட்டனாச்சம் பட்டி முத்துக்காளிப்பட்டி, கவுண்டம்பாளையம், உள்ளிட்ட 5 ஊராட்சிகளை ராசிபுரம் நகராட்சியுடன் இணைப்பதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சியினர் அமைப்புனர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கட்டனாச்சம்பட்டி ஊராட்சி,ராசிபுரம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.பி. தாமோதரன் தலைமையில் ஒன்றிய அவைத் தலைவர் டி.குப்புசாமி, ஒன்றிய அம்மா பேரவை மணி, ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் பாலாஜி , ஆகியோர் முன்னிலையில் கட்டனாச்சம்பட்டி சாலையில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கையொப்பமிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நகராட்சியுடன் இணைப்பதால் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பறிபோகும் நிலைமை, சொத்து வரி உயர்வு ,வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி கிராம மக்கள் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து கிராம மக்கள் ஊர்வலமாக சென்று கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் வரதராஜு, முத்து, அத்தியப்பன், ரவிக்குமார், சக்திவேல், பழனி, பாலச்சந்தர், முனியப்பன், பெரியசாமி, சுப்பிரமணி, ஆறுமுகம், ஜெகநாதன், கண்ணதாசன், அன்பழகன், சக்திவேல், சுந்தரம், ராஜேந்திரன், சண்முகம், மாணிக்கம், செல்வகுமார் ,ரஜினி உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.