கோழிப் பண்ணையில் நாய் தாக்குதல் – 100க்கும் மேற்பட்ட கோழிகள் பலி !
கருமத்தம்பட்டியில் பகுதிகளில் கோழிப் பண்ணையில் நாய்கள் அட்டகாசம்.;
கோவை மாவட்டம் சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் உள்ள கோழிப் பண்ணைக்குள் நேற்று இரவு 10 தெரு நாய்கள் புகுந்து தாக்கின. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட கோழிகள் கடித்து கொல்லப்பட்டன. சண்முகம் என்பவருக்குச் சொந்தமான பண்ணையில் நடந்த இந்த சம்பவம், இன்று காலை உரிமையாளர் பாலசண்முகம் கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். பல கோழிகள் கடித்து குதறப்பட்ட நிலையில் பண்ணையில் சிதறிக்கிடந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.