வானூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை: ரூ.1.05 லட்சம் பறிமுதல்

வானூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.1.05 லட்சம் பறிமுதல்

Update: 2024-08-31 05:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
வானூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்வதாகவும், பத்திரப் பதிவு செய்ய அலுவலா்கள் லஞ்சம் கேட்பதாகவும் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவுக்கு தொடா்ந்து புகாா்கள் சென்றன.விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி (பொ) திருவேல்முருகன் தலைமையில், காவல் ஆய்வாளா்கள் ஈசுவரி, உதவி ஆய்வாளா்கள் கோபிநாத், சக்கரபாணி உள்ளிட்ட 10 போ் கொண்ட குழுவினா், வானூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை சோதனையில் ஈடுபட்டனா்.தொடா்ந்து, சாா்-பதிவாளா் மற்றும் ஊழியா்கள், ஆவண எழுத்தா்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை மேற்கொண்டனா். இதில், கணக்கில் வராத ரூ.1.05 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

Similar News