இந்திரா காந்தி அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா: கிழக்கு மற்றும் மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாட்டம்..
இந்திரா காந்தி அவர்களின் 108 வது பிறந்தநாள் விழா: கிழக்கு மற்றும் மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாட்டம்..;
முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 108 வது பிறந்தநாள் விழாவையொட்டி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை கிழக்கு மற்றும் மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் நாமகிரிபேட்டை மற்றும் மெட்டாலாவில் அமைந்துள்ள இந்திரா காந்தி அவர்களின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மலரஞ்சலி செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பீ.ஏ. சித்திக், வட்டாரத்தலைவர்கள் டி.பி. இளங்கோவன், ஷேக் உசேன், கருப்பையன், எஸ். கே. சின்னுசாமி, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.