ஸ்ரீவில்லிபுத்தூரில் 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்து சிறையில் அடைப்பு.*

ஸ்ரீவில்லிபுத்தூரில் 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்து சிறையில் அடைப்பு.*;

Update: 2025-01-07 13:12 GMT
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்து சிறையில் அடைப்பு. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்கு சொந்தமான அரசு தி.ரு.வி.க நகர் மன்ற தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த இரண்டு பள்ளிகளுக்கும் தனித்தனியே தலைமை ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்த நிலையில் பள்ளி மைதானத்திற்கு விளையாட வந்த பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு நகர்மன்ற திரு வி க தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜபாளையத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தேர்வு பேப்பர் திருத்த வந்த போது பாலியல் தொல்லை அளித்துள்ளார். பள்ளி மாணவர்கள் சுதாரித்துக் கொண்டு அவரிடமிருந்து தப்பித்து வந்த நிலையில் திரு வி க மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் இடம் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்ட கல்வி அலுவலரிடம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு புகார் அளித்த நிலையில் மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைகள் நல பிரிவு பாலியல் தடுப்பு அரசு அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் விசாரணை செய்த பின்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் ராஜேஷ் மீது புகார் அளித்த நிலையில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமை ஆசிரியர் ராஜேஷ் என்பவரை இன்று கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். பள்ளியில் படிக்க வரும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் மீது ஸ்டாலின் அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News