பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு ரூ.11 லட்சத்திற்கு ஏலம்.
பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு ரூ.11 லட்சத்திற்கு ஏலம் போனது.;
பரமத்தி வேலூர்,மே.15: பரமத்தி வேலூர், வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.11 லட்சத்து 76 ஆயிரத்திற்கு தேங்காய் பருப்பு விற்பனையானது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 7 ஆயிரத்து 520 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. அதிகபட்ச விலையாக கிலோ ரூ 188.10-க்கும், குறைந்தபட்சம் ரூ.136.99-க் கும், சராசரியாக ரூ.185.10-க்கும் விற்பனையானது. இரண்டாம் தர தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ. 135.19-க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ.105.19-க்கும், சராச ரியாக கிலோ ரூ.123.09 -க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ. 11 லட்சத்து 76 ஆயிரத்து 880-க்கு தேங்காய் பருப்பு விற்பனையானது.