ரேஷன் குறைதீர்க்கும் முகாம் வரும் 12ஆம் தேதி நடக்கிறது!

அரசு செய்திகள்;

Update: 2025-04-09 04:21 GMT
ரேஷன் குறைதீர்க்கும் முகாம் வரும் 12ஆம் தேதி நடக்கிறது!
  • whatsapp icon
புதுக்கோட்டை கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு பொது விநியோகம் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை கலைவதற்காக குடும்ப அட்டைகள் நியாய விலை கடை தொடர்பான குறைதீர்க்கும் முகாம் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் தொடர்புடைய தனி தாசில்தார் வட்டம் வளங்கள் அலுவலர்கள் முன்னிலையில் வரும் 12ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கிறது. முகாமில் பொதுமக்கள் குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கூறும் மனுக்களை பதிவு செய்தல், செல்போன் எண் பதிவு மாற்றம் ஆகிய சேவைகளுக்கு கோரிக்கை மனு அளிக்கலாம். திருநங்கைகளும் விண்ணப்பங்களும் அளித்து பயன்பெறலாம் மேலும் கார்டுதாரர்கள் நியாய விலை கடைகளில் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதில் தங்களுக்குள்ள இடர்பாடுகள் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து புகார்களை தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News