காற்று மழையால் 12 மின்கம்பங்கள் சாய்ந்ததை சரி செய்யாதால் விவசாயம் பாதிப்பு

திருமணஞ்சேரி கிராமத்தில் தரைக்காற்றுடன் பெய்த மழையில் 12 மின்கம்பங்கள் கீழேவிழந்து 14 நாட்கள் ஆகியும் சரி செய்யாமல் மின்சார வாரியம் அலட்சியப்படுத்துவதால் குறுவை சாகுபடி பணிகளை துவங்க முடியாமல் விவசாயிகள் தவிப்பதாக குற்றசாட்டு.;

Update: 2025-04-24 13:50 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தைக் கொண்டு பம்பு செட் மூலம் விவசாயிகள் முன்பட்டபட்ட குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கீழ அக்ரஹாரம் பகுதியில் 60 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு விவசாயிகள் 10 ஏக்கரில் பருத்தி மற்றும் 10 ஏக்கரில் சோயா பீன்ஸ் சாகுபடி செய்த நிலையில் மின்சாரம் இல்லாமல் 40 ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகளை துவங்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கடந்த 11ஆம் தேதி சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்ததில் விவசாய நிலங்களில் உள்ள 12 மின்கம்பங்கள் அடியோடு பெயர்ந்தும் முறிந்தும் விழுந்தது. இதனை பார்வையிட்ட மின்சாரவாரியத் துறை அதிகாரிகள் மின்கம்பங்களை சீரமைத்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பருத்தி, சோலாபீன்ஸ் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு ஏக்கரில் சோழா பீன்ஸ் கருகி சுருங்கி விட்டதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Similar News