அமராவதி ஆற்றில் 12 அடி நீளம் கொண்ட முதலை
அமராவதி ஆற்றில் 12 அடி நீளம் கொண்ட முதலைகள் உள்ளது யாரும் இறங்க வேண்டாம் என நகராட்சி எச்சரிக்கை;
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.சீத்தக்காடு,மணலூர்,தாளக்கரை பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதலைகள் தென்பட்ட நிலையில் தற்போது தாராபுரம் நகராட்சி பூங்கா பின்புறம் உள்ளது. நகராட்சி நீர்த்தேக்க தொட்டி அருகாமையில் கட்டப்பட்டுள்ள அமராவதி தடுப்பணைக்கு அருகில் 12 அடி மற்றும் 13 அடி நீளமுள்ள முதலைகள் அப்பகுதி பொதுமக்கள் கண்டுள்ளனர்.அச்சம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதிகாரிகள் சம்பவ இடத்தில் பார்வையிட்டு முதலை நடமாட்டத்தை உறுதி செய்த பின்பு. நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆற்றில் இறங்கவோ துணி துவைக்கவும் வேண்டாம் என எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.