அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி 12.01.2025 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி 12.01.2025 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.
பொது மக்களிடையே உடற்தகுதி கலாச்சாரம் புகுத்தும் வண்ணம் அறிஞர் அண்ணா பிறந்த நாள் முன்னிட்டு மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப் போட்டி மாவட்டத்தில் வரும் 12.01.2025 காலை 6.30- க்கு நடைபெற உள்ளது. இப்போட்டிகள் 17 முதல் 25 வயதிற்குட்பட்ட பிரிவில் ஆண்களுக்கு 8 கி.மீ மற்றும் பெண்களுக்கு 5 கி.மீ தூரமும், 25 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பிரிவில் ஆண்களுக்கு 10 கி.மீ மற்றும் பெண்களுக்கு 5 கி.மீ என இரண்டு பிரிவுகளில் நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000/- மும், இரண்டாம் பரிசாக ரூ.3000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.2000/-மும், 4 முதல் 10 இடம் பெறுபவர்களுக்கு தலா ரூ.1000/- மும் பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ / மாணவிகள் தங்களது பெயர்களை மாவட்ட விளையாட்டு அரங்கில் 11.01.2025 அன்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இப்போட்டிகளில் பங்கேற்க தகுதியுள்ள பள்ளி மாணவ/ மாணவியர் தங்களது வயதுச் சான்றிதழை தலைமையாசிரியர் கையொப்பம் பெற்று 12.01.2025 அன்று காலை 6.30 மணிக்குள் விருதுநகர் மாவட்ட மருத்துவ கல்லூரி வளாகத்தில் முன்பாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களிடம் ஆஜராகுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. வெற்றி பெற்ற மாணவ/மாணவியர் தங்களது வங்கி கணக்கு புத்தக நகல் (செயற்படுத்துகிற கணக்கு Active Account Only) மாவட்ட விளையாட்டு அரங்கில் சமர்ப்பிக்க வேண்டும். பரிசு தொகை வங்கி பரிவர்த்தனை மூலம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். எனவே, மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் அதிக அளவில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இப்போட்டிகள் குறித்த விவரங்களுக்கு 04562-252947 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.