தூத்துக்குடி மாவட்டத்தில் 13 காவல் நிலையங்கள் தரம் உயர்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 காவல் நிலையங்கள் தரம் உயர்வு;

Update: 2025-06-09 16:29 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் 13 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு புதிதாக 13 இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி தமிழகம் முழுவதும் 280 காவல் நிலையங்களில் சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையங்கள் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக ரூ.1.18 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார் அதன்படி தமிழகம் முழுவதும் 280 சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல் நிலையங்கள், இன்ஸ்பெக்டர்கள் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு கடந்த மே 29ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அவை தற்போது அமலுக்கு வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் தட்டப்பாறை, புதியம்புத்தூர், குரும்பூர், சாயர்புரம், கொப்பம்பட்டி, நாலாட்டின்புத்தூர், சூரங்குடி, குளத்தூர், தருவைகுளம், சங்கரலிங்கபுரம், எப்போதும் வென்றான், புதூர், மெஞ்ஞானபுரம் ஆகிய 13 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த காவல் நிலையங்களில் தனியாக இன்ஸ்பெக்டர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

Similar News