எம்எல்ஏ உட்பட 130 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி போராட்டம்;

Update: 2025-08-06 02:54 GMT
குமரி மாவட்டத்திற்குள் மணல், ஜல்லி மற்றும் கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடு இல்லாத வகையில் கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது  போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சித்திரங்கோடு சந்திப்பில் நேற்று மாலை பாரதிய ஜனதா கட்சியினர் அனுமதி இன்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 130 பேரை தக்கலை போலீசார் கைது செய்து பின்னர் விடுவிதனர். இந்த மறியல் போராட்டத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக போராட்டத்தில் பங்கேற்ற பாரதிய ஜனதா எம்எல்ஏ எம் ஆர் காந்தி, மேற்கு மாவட்ட பா ஜ தலைவர் சுரேஷ், முன்னாள் தலைவர் தர்மராஜ் உட்பட 130 பேர் மீது  தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News