கிருஷ்ணகிரியில் 14 தேர்கள் ஒன்று கூடியது- பக்தர்கள் பரவசம்.
கிருஷ்ணகிரியில் 14 தேர்கள் ஒன்று கூடியது- பக்தர்கள் பரவசம்.;
கிருஷ்ணகிரியில் கோயில்களில் நடைபெற்ற நவராத்திரி நிறைவு விழாவை ஒட்டி திரளான பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர். வீடுகள் மற்றும்கோயில்களில் நவராத்திரியை ஒட்டி கொலு அமைத்து தினம் தோறும் சிறப்பு பூஜைகள் செய்து மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். 9 நாட்கள் நடைபெறு வந்து இந்த நவராத்திரி விழா நிறைவு பெற்றதை ஒட்டி கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 14 கோவில்களின் உள்ள உற்சவம் மூர்த்திகள் அலங்கரித்து பழையபேட்டை காந்தி சிலை அருகே நேற்று நிறுத்தி வள்ளி மரம் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் இதனால் அங்கு விழா கோலம் காணப்பட்டது