தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி நகர் திராவிடர் கழகம் சார்பாக 23ஆம் ஆண்டு குருதிக்கொடை முகாம்
முகாமில் 200 பேர் கலந்து கொண்டதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் தகுதி பெற்று குருதிக்கொடை வழங்கினார்கள்.
தந்தை பெரியாரின் 146 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி நகர் திராவிடர் கழகம் சார்பாக 23ஆம் ஆண்டு குருதிக்கொடை முகாம். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தனியார் மண்டபத்தில் தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி நகர் திராவிடர் கழகம் சார்பில் குருதிக் கொடை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஆண்டிபட்டி பேரூராட்சி சேர்மன் பொன்.சந்திரகலா தலைமை தாங்கினார். முன்னாள் சேர்மன் ஆ.ராமசாமி மற்றும் திராவிடர் கழக மாவட்ட தலைவர் சுருளிராஜ், மாவட்ட துணை தலைவர் ஸ்டார் நாகராஜ் மாவட்ட காப்பாளர் ரகுநாகநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் பேபி சாந்தா , அன்புக்கரசன் ,தேசிய நல்ல ஆசிரியர் விருது பெற்ற ஓய்வு ஆசிரியர் தில்லை நடராஜன், மன்னர் மன்னன், சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .முகாமை உலக அமைதி குழு ,பசுமை தேனி நிர்வாகி சர்ச்சில் துரை துவக்கி வைத்தார். இந்த ஆண்டு ரோட்டரி கிளப் ஆப் ஆண்டிபட்டி அமைப்பினர் முகாமில் கலந்து கொண்டனர் .இந்த அமைப்பின் சார்பில் ரோட்டரி கிளப் தலைவர் பழனி குமார், செயலாளர் சபரிநாதன், மேஜர் டோனர் ரமேஷ் குமார், மற்றும் பிரேம்குமார் , சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர். நோபிள் டோனர்ஸ் கிளப் சார்பில் மணிகண்டநாதன், அன்னக்கொடி ,ஆண்டிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியகுளம் அரசு தலைமை பொது மருத்துவமனை மருத்துவர் த.பாரதி தலைமையிலான மருத்துவ குழுவினர் குருதி பெறும் மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஸ்டார் நாகராஜ் குருதி வழங்கி கூறியதாவது ,தேனி மாவட்டத்திலேயே முதன்மையாக கடந்த 25 ஆண்டுகளாக நன்மதிப்பைப் பெற்று முகாம் நடத்தி வருகிறோம் . முகாமில் 200 பேர் கலந்து கொண்டதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் தகுதி பெற்று குருதிக்கொடை வழங்கினார்கள். இந்த முகாமில் கூலித் தொழிலாளர்கள், அரசு மருத்துவர்களும் மற்றும் கணவன் மனைவியுடன் வந்தும் ,அம்மா அப்பா ஆகியோர் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்தும், குருதிக்கொடை வழங்குவது தனி சிறப்பாகும் .நான் தற்போது 65 வது முறையாக குருதிக்கொடை வழங்கி இருக்கிறேன். இதுபோல் வரும் காலத்தில் இளைஞர்கள், பெரியோர்கள் ,பெண்கள் தாராளமாக வந்திருந்து மனமுவந்து குருதி வழங்க வேண்டும் என்று கூறினார்.