சிகிச்சைக்கு செல்ல 15 கி.மீ., நடை பயணம்
சிகிச்சைக்கு செல்ல 15 கி.மீ., நடை பயணம்;
By : King 24X7 News (B)
Update: 2023-12-05 08:53 GMT
மருத்துவ முகாம்
அரசுப் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு மிஷின் இருந்தும் பல மாதங்களாக பயன்படுத்தாமலே வீணாகும் நிலை, மருத்துவ சிகிச்சை வங்கி சேவைகளுக்காக 15 கி.மீ., நடக்கும் அவலம், அடிப்படை வசதிகள் இல்லா பள்ளி என நத்தம் ஒன்றியத்தில் உள்ள சேத்துார் ஊராட்சி மக்கள் பாதிப்பினை சந்திக்கின்றனர்.
ஊராட்சியில் அடிப்படை வசதிகள் ஓரளவுக்கு செய்யப்பட்டிருந்தாலும் வங்கி, கால்நடை மருந்தகம் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாமல் உள்ளது.இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.