ஜேடர்பாளையம் அருகே 15 ஆடுகளை கடித்துக் கொன்ற மர்ம விலங்கு.
ஜேடர்பாளையம் அருகே 15 ஆடுகளை கடித்துக் கொன்ற மர்ம விலங்கு குறித்து வனத்துறையினர் விசாரணை.;
பரமத்தி வேலூர்,ஜன. 16: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் சரளை மேட்டை சேர்ந்தவர் வழக்கறிஞர் துரைசாமி. இவர் தனது தோட்டத்தில் ஆடு மற்றும் ஆடுகள் வைத்து வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாட்டுப்பொங்கலை முன்னிட்டு துரைசாமி அவரது குடும்பத்தினருடன் தோட்டத்தில் மாட்டுப் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி இரவு பத்து மணி வரை தோட்டத்தில் இருந்து விட்டு பின்னர் வீட்டுக்கு சென்றுள்ளார். இன்று வியாழக்கிழமை தோட்டத்தில் வேலை செய்பவர் வந்து பார்த்தபோது துரைசாமி வளர்த்து வந்த 15 ஆடுகள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக துரைசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்து துரைசாமி தனது ஆடுகளை மர்ம விலங்குலா அல்லது வெறி நாய்களா என்பது தெரியாமல் பரமத்தி வேலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஆடுகளின் ரத்தம் மாதிரியே சேகரித்து பரிசோதனை நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த பின்பு தான் ஆடுகளைக் கடித்தது வெறி நாய்களா அல்லது மர்மவிலங்கா என்பது என்பது குறித்து தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர். பொங்கல் தினத்தில் ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்துக் கொண்டது பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.