குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் 15ம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், வறுமை ஒழிப்பு திட்டம், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கவும், பொது மக்களுக்கு தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்து துறைகளின் அலுவலர்களும் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். எனவே பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெறலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.