கன்னியாகுமரி அருகே தாழக்குடி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் சிக்கிழுத்த செம்மல் தியாகி வ.உ.சி 154 வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, தாழக்குடி ஊர் பொதுமக்கள் சார்பாக அவரது நினைவு மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு இன்று வெள்ளிகிழமை மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக இணை செயலாளர் கவுன்சிலர் ரோகிணிஅய்யப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தாழக்குடி அகில இந்திய வ உ சி பேரவை தலைவர் தாணு உட்பட ஊர் பொதுமக்கள், வ உ சி பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.