குடிபோதையில் குளத்தில் குளித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு 16 மணி நேரத்திற்கு பிறகு உடல் மீட்பு., நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை..*
குடிபோதையில் குளத்தில் குளித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு 16 மணி நேரத்திற்கு பிறகு உடல் மீட்பு., நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை..*;
விருதுநகர் மாவட்டம் குடிபோதையில் குளத்தில் குளித்த நபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு 16 மணி நேரத்திற்கு பிறகு உடல் மீட்பு., நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவிலுக்கு சொந்தமான திருமுக்குளம் உள்ளது. இந்த குளத்திற்கு வடகரை தெருவை சேர்ந்த குருநாதன், கண்ணன்,கதிர்வேல் மூவரும் மது அருந்திவிட்டு நேற்று மாலை மூன்று மணிக்கு குளிக்க சென்றுள்ளனர். குளத்தின் மையப் பகுதியில் உள்ள மண்டபத்திற்கு குருநாதன் நீந்தி சென்ற போது பாதி வழியில் நிலைத்திடுமாறி நீரில் மூழ்கியுள்ளார். இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை மற்றும் இரவு முழுவதும் நீரில் மூழ்கியவரை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் இன்று 16 மணி நேரத்திற்கு பிறகு சடலமாக குருநாதன் மீட்கப்பட்டு காவல்துறையிடம் தீயணைப்புத் துறையினர் ஒப்படைத்தனர். குருநாதனின் உடலை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்து குருநாதனின் இறப்பு குறித்து நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.