அரசு அங்காடியில் 16 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் ஏலம்

தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் 16 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் ஏலம்;

Update: 2025-03-18 02:08 GMT
  • whatsapp icon
தர்மபுரி 4 ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பட்டுக்கூடு ஏல அங்காடியில், தினசரி தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டங்களான சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை திருப்பத்தூர், மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் வெண்பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த நேற்று மார்ச் 17 பல்வேறு பகுதிகளில் இருந்து 36 விவசாயிகள் 2449 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அதிகபட்சமாக ஒரு கிலோ 745 ரூபாய்க்கும், சராசரியாக  கிலோ 647 ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக கிலோ 406 ரூபாய்க்கும் விற்பனையானது. மேலும் நேற்று 16,04,686 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானதாக பட்டுக்கூடு நலஅலுவலர் தெரிவித்துள்ளார்.

Similar News