கரூர்-தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்.
கரூர் -தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம்.;
கரூர் -தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மாநில மாநாட்டின் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாம் கட்டமாக இன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் தமிழக தலைநகரங்களில் இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் சார்பில் ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில தலைவரும் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாருமான ஜான் போஸ்கோ பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட தலைவர் பாலுசாமி மாநில இணை செயலாளர் வெங்கடேஷ் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் வளர்மதி மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தூய்மை காவலர்களின் மாதாந்திர ஊதியத்தை 10,000 ஆக உயர்த்தி ஊராட்சி மூலம் ஊதியத்தை வழங்கிட வேண்டும். மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களின் பணி காலத்தினை கருத்தில் கொண்டு சிறப்பு காலமுறை ஊதியம் 15 ஆயிரம் வழங்கிட வேண்டும். கிராம சுகாதார உறுப்பினர்களுக்கு மாதம் 10,000 ஊராட்சி ஊதியம் வழங்கிட வேண்டும் மற்றும் பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை,சிறப்பு நிலை,தேக்க நிலை ஊதியம் வழங்கிட வேண்டும். கிராம ஊராட்சியில் பணிபுரிந்து வரும் கணினி உதவியாளர்களுக்கு மாதம் 20,000 வழங்கி பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் தெரிவித்த மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் எங்கள் போராட்டத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற அழைத்துப் பேச வேண்டும். தவறினால் வரும் நவம்பர் 24ஆம் தேதி தமிழக முழுவதும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கிராம ஊராட்சி செயலாளர்களை ஒன்று திரட்டி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் அன்றைய தினமே சென்னை பனகல் பார்க் முன்பு காத்திருக்கும் போராட்டத்திலும் ஈடுபடப் போவதாக தெரிவித்தார்.