சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ரூ.17 லட்சத்தில் மீன் பூங்கா

மீன் தொட்டிகள் கட்டும் பணி முடிவடைந்து விரைவில் திறக்க நடவடிக்கை;

Update: 2025-04-06 08:20 GMT
சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் ரூ.17 லட்சத்தில் மீன் பூங்கா
  • whatsapp icon
சேலம் மாவட்டம் ஏற்காடு மலை அடிவாரம் பகுதியில் 80 ஏக்கர் பரப்பளவில் குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன என 21 வகையான 275 வன உயிரினங்கள் பராமரிக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்காட்டிற்கு அடுத்த சுற்றுலா தளமாக குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா திகழ்கிறது. அதன்படி குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா இது வரை சிறிய பூங்கா தரத்தில் இருந்தது. சமீபத்தில் நடுத்தர பூங்காவாக தரம் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து இந்த பூங்காவில் மேலும் பல வன விலங்குகள் சேர்த்து பராமரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் முதல் கட்டமாக மீன்கள் பராமரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக பூங்கா வளாகத்தில் ரூ.17 லட்சத்தில் மீன்கள் பராமரிக்க, மீன் தொட்டிகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் கூடுதலாக மீன்கள் பராமரிக்கப்பட உள்ளது. இதற்காக பூங்காவில் 8 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழத்தில் 2 தொட்டிகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதே போன்று 4 அடி நீளம், 2 அடி அகலம், 2 அடி ஆழத்தில் 4 தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிவடைந்து விடும். இன்னும் 10 நாட்களுக்குள் மீன் தொட்டிகள் திறக்கப்படும். அதன்பிறகு பல்வேறு வகையான மீன்கள் இந்த தொட்டிகளில் பராமரிக்கப்படும். பல்வேறு வகையான மீன்கள் காட்சி படுத்தும் போது, பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதகரிக்கும் இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News