ஜூன் 17 தலைமை செயலக முற்றுகை போராட்டம்

ஜுன் 17 ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.;

Update: 2025-06-13 06:14 GMT
தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் டி ஆர் பாண்டியன் மன்னார்குடியில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் ஈரோட்டில் விவசாயிகள் கருத்தரங்கு மாநாட்டை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகையில் பச்சை துண்டை போட்டுக்கொண்டு போலி விவசாயிகள் அரசின் திட்டங்களை எதிர்க்கிறார்கள்,பொய்யான விமர்சனம் செய்வதாக பேசிருப்பது வன்மையயாக கண்டிக்க தக்கது. பச்சை துண்டு விவசாயிகளை விமர்சிப்பதால் அவரது கட்சிக்கும் அரசுக்கும் நல்ல பெயர் வருகிறது என்றால் அதனை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் திமுக அரசு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறதா, முதலமைச்சர் கூறும் புள்ளி விவரங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. திமுக அரசு பொறுப்பேற்ற 2021ஆம் ஆண்டே குருவை பயிருக்கான காப்பீடு திட்டம் கைவிடப்பட்டது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட திருமருகல் பகுதியை பாதுகாக்கப்பட்ட பெட்ரொலிய மண்டலமாக அறிவித்தார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் இன்று வரை தள்ளுபடி செயப்படவில்லை. நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2500ருபாயும், கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நெல் கொள்முதலில் நடைபெற்ற 800 கோடி ருபாய் ஊழல் குறித்து அந்த துறை அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.ஒட்டுமொத்த விவசாயிகளை வீதியில் நிறுத்துயுள்ள தமிழக அரசை கண்டித்து இம்மாதம் 17 ஆம் தேதி தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக பிஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

Similar News