கோவையில் 18-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் !

சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன தலைவர்கள், ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்.;

Update: 2025-09-05 02:48 GMT
கோவையில் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டம் 18-வது நாளாக வியாழக்கிழமை தொடர்ந்தது. கோவை அரசு போக்குவரத்து சுங்கம் பனிமனை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில், சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சம்மேளன துணைப் பொதுச் செயலாளர் எம்.கனகராஜ், மாவட்டத் தலைவர் லட்சுமிநாராயணன், மாவட்ட செயலாளர் வேளாங்கண்ணிராஜ், மாவட்ட பொருளாளர் மகேஷ்குமார், ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேந்திரன், அருணகிரிநாதன் உள்ளிட்டோர் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வுபெற்றோர் திரளாக பங்கேற்றனர்.

Similar News