திருச்செங்கோடு எழுகரை நாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து மகாநாடு சார்பில்சிறந்த மாணவர்கள்187 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எழுகரை நாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து மகாநாடு சார்பில்சிறந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. 187 மாணவ மாணவிகளுக்கு 18 லட்ச ரூபாய் மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்பட்டது;

Update: 2025-10-18 17:13 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செங்குந்தர் திருமண மண்டபத்தில் எழுகரைநாடு செங்குந்தர் பாவடி பஞ்சாயத்து அறக்கட்டளை சார்பாக 12 வது படித்துவிட்டு உயர்கல்வியில் சேர்ந்து பயின்று வரும் மாணவ மாணவிகளுக்குகல்வி உதவித் தொகை வழங்கும் விழா  நடைபெற்றது. இந்த விழாவிற்கு செங்குந்தர் எழுகரை நாடு செங்குந்தர் மகாநாடு நாட்டமைக்காரர் ரவிக்குமார் தலைமை வகித்தார்.ஏ.ஆர்.கே மனோகரன் மற்றும் காரியக்காரர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் 12வது படித்துவிட்டு உயர்கல்விக்கு கல்லூரியில் சேர்ந்த 187 மாணவ மாணவிகளுக்கு செங்குந்தர் அறக்கட்டளை சார்பாக 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. கல்வி உதவித் தொகையை பல்வேறு உறவின் முறையார் வழங்கினார் உதவித்தொகை வழங்கிய பின்பு நாட்டமைக்காரர் ரவிக்குமார் பேசும்போது உதவித்தொகையை பெற்று கல்வியில் மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்தினார் இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள்மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்

Similar News