இரவில்  மண் எடுத்த 19 டெம்போக்கள் பறிமுதல் 

பூதப்பாண்டி குளத்தில்;

Update: 2025-03-28 07:13 GMT
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாவல் காடு கிராமத்தில்  மலட்டு குளத்தில் அதிகாலை இரண்டு மணி முதல் காலை 8 மணி வரை திருட்டுத்தனமாக இரு கோஷ்டிகளாக பிரிந்து வண்டல் மண் எடுத்துச் செல்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பூதப்பாண்டி போலீசார் உதவியுடன் இன்று 28-03-2025 அதிகாலை 3 மணி அளவில் அப்பகுதியில் உள்ள  குளங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.      அப்போது குளத்தில் வண்டல் மண் எடுத்துக் கொண்டு இருந்த 19 டெம்போக்கள் மற்றும் மூன்று கனரக ஹிட்டாச்சி எந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டில் 19 டெம்போக்களும் 3 கனரக ஹிட்டாச்சி எந்திரங்களும் உள்ளது.      இரவு நேரங்களில் சட்டவிரோதமாக வண்டல் மண் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி வாகனங்களை அரசுடமையாக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படும். வாகன உரிமையாளர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சார்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News