பெரம்பலூர் மாவட்ட 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு

வயது வரம்பு: 01.09.2006 ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.;

Update: 2025-04-20 16:58 GMT
பெரம்பலூர் மாவட்ட 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வு பெரம்பலூர் தண்ணீர்பந்தல் தந்தை ரோவர் பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வீரர்கள் 26-4-25 அன்று தங்கள் ஆதார் அட்டை வரலாற்று சான்று, பிறப்பு சான்றிதழ், கடவுசீட்டு அளவிளான புகைப்படத்துடன் காலை 9 மணிக்குள் வெள்ளை நிற சீருடையில் தங்கள் கிரிக்கெட் உபகரணங்களுடன் வரவேண்டும். கல்லூரியில் பயிலும் வேற்று மாவட்ட வீரர்கள் கல்லூரி மதிப்பெண் சான்றிதழ், முதல்வரின் அங்கீகார ஒப்புதல் சான்று மற்றும் கல்லூரி அடையாள அட்டையுடன் வரவும். பணி செய்யும் ஊழியர்கள் தங்கள் 12 மாத ஊதிய சீட்டு, வங்கி பரிவர்தணை சான்று மற்றும் அடையாள அட்டையுடன் வரவும்.
கல்லூரியில் பயிலும் வேற்று மாவட்ட வீரர்கள் மற்றும் பணி செய்யும் வேற்று மாவட்டத்தை சேர்ந்த ஊழியர்கள் , வேறு மாவட்டத்திற்கு விளையாடுவதில் லை என்ற உறுதிமொழி எழுத்து பூர்வமாக அளிக்க வேண்டும்
. வயது வரம்பு: 01.09.2006 ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். மேலும் முழு விவரங்களுக்கு S. K பழனியப்பன், செயலாளர் பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன். தொடர்புக்கு: 9942994641,98659530023,9840673348.

Similar News