தேனி மாவட்டத்தில் 192 டன் நெல் விதைகள் கையிருப்பு

நெல் விதை;

Update: 2025-06-04 14:06 GMT
தேனி மாவட்டத்தில் 8 வட்டாரங்களில் தலா ஒரு வேளாண் விரிவாக்க மையங்கள் உள்ளன. இதுதவிர பெரியகுளம், போடி, சின்னமனூரில் தலா 3, தேனி, கம்பத்தில் தலா 2, உத்தமபாளையத்தில் ஒன்று என மொத்தம் 14 துணை வேளாண் விரிவாக்க மையங்கள் உள்ளன. இவற்றில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு வழங்க 192 டன் நெல் விதைகள் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News