வெள்ளியணை அருகே ஆளில்லாத வீட்டில் கடப்பாரை,கத்தி ஆயுதங்களுடன் 2பேர் உலா வரும் சிசிடிவி காட்சி.
வெள்ளியணை அருகே ஆளில்லாத வீட்டில் கடப்பாரை,கத்தி ஆயுதங்களுடன் 2பேர் உலா வரும் சிசிடிவி காட்சி.
வெள்ளியணை அருகே ஆளில்லாத வீட்டில் கடப்பாரை,கத்தி ஆயுதங்களுடன் 2பேர் உலா வரும் சிசிடிவி காட்சி. வெள்ளியணை அருகே ஹெல்மெட் & முகமூடி அணிந்த கொள்ளையர்கள் ஆளில்லாத வீட்டில் கடப்பாரை மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் உலா வரும் சிசிடிவி காட்சி கரூரில் வைரலாகி வருகிறது. கரூர் மாவட்டம், வெள்ளியணை தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளனர். முருகன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் மணவாடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட வீடு ஒன்றை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சொந்தமாக வாங்கி உள்ளார். தற்போது அந்த வீடு காலியாக உள்ள நிலையில், டிசம்பர் 27 இரவு ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத 2 கொள்ளையர்கள் மதில் சுவர் மீது ஏறி குதித்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை மேலே இருந்து கீழ்ப்பக்கமாக திருப்பி வைத்துள்ளனர். மேலும் தாங்கள் கொண்டு வந்திருந்த கத்தி மற்றும் கடை பாறை போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று நோட்டமிட்டுள்ளனர். அந்த வீட்டில் டிவி, பிரிட்ஜ், சோபா, கட்டில் உள்ளிட்ட பர்னிச்சர் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் மட்டும் இருந்தன. ஆனால், கொள்ளையர்கள் எதிர்பார்த்து வந்தது போல நகை, பணம் என எதுவும் இல்லாததால், கொள்ளையர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர். இந்த நிலையில், கொள்ளையர்கள் வந்து போன காட்சிகள் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், ஆளில்லாத வீட்டிற்குள் கொள்ளையர்கள் இருவர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து சென்றது குறித்து, முருகன் வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.