குமரி மாவட்டம் நாகர்கோவில், பெருவிளை பகுதியை சேர்ந்தவர் ஜான் ஸ்டீபன் ( 58). இவர் ஜாதகம் மற்றும் நாட்டு வைத்திய சிகிச்சை செய்து வந்தனர். கடந்து 8-ம் தேதி வீட்டில் ஜான்ஸ்டீபன் இறந்து கிடந்தார். இவரது மகன் ஜான் ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில் ஆசாரிப்பள்ளம் போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பிரேத பரிசோதனையில் ஜான் ஸ்டீபன் கழுத்து நெரித்து முகத்தில் தாக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. சம்பவ தினம் ஜான் ஸ்டீபன் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை அடுத்து இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து, அப்போது சந்தேகத்திடமான நபர்களை பிடித்து விசாரித்தனர். தற்போது இரணியல் அருகே உள்ள கட்டிமாங்காடு பகுதி சேர்ந்த பெண், நெல்லை மாவட்டம் களக்காடு பகுதி சேர்ந்த வாலிபர் என இரண்டு பேரை தனிப்பாடை போலீசார் பிடித்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அந்த பெண் கூலிப்படை மூலம் அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.