தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வு.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வு திருவாரூர் திரு.வி.க. அரசு கலை கல்லூரியில் நடைபெறுவதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பார்வையிட்டார்.;

Update: 2025-02-08 16:57 GMT
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 முதன்மை தேர்வு திருவாரூர் திரு.வி.க. அரசு கலை கல்லூரியில் நடைபெறுவதனை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் பார்வையிட்டார். திருவாரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குருப்-2 முதன்மை தேர்வானது திரு.வி.க. அரசு கலை கல்லூரியில், இன்றைய தினம் (08.02.2025) காலை 9:30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறுகிறது. இத்தேர்வினை எழுத 243 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இன்றைய தினம் நடைபெற்ற தேர்வில் 227 தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். இத்தேர்வு பணிக்கு 1 நிலையான பறக்கும் படை தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சண்முகநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் செல்வபாண்டியன், திருவாரூர் வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News