கடையநல்லூரில் இருசக்கர வாகனம் மோதல் ஒருவர் பலி, 2 பேர் காயம்
இருசக்கர வாகனம் மோதல் ஒருவர் பலி, 2 பேர் காயம்;
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே காசி தர்மத்தில் இன்று அப்பகுதியில் சாலையில் வந்த இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது, இதில் அதே பகுதியை சேர்ந்த கருப்பசாமி (49) என்ற ஒருவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் உயிர் வந்த கருப்பசாமி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில் காயமடைந்த இருவர் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.