சுசீந்திரத்தில் கஞ்சா விற்றதாக 2 பேர் கைது

ஒருவருக்கு போலீஸ் வலை;

Update: 2025-03-07 03:27 GMT
குமரி மாவட்டம் சுசீந்திரம் போலீசார் நேற்று பகல் 1 மணி அளவில் சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பைபாஸ் ரோட்டில் பாலம் அருகில் சென்று கொண்டிருக்கும் பொழுது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரணை செய்ததில் நாகர்கோவில் அருகே உள்ள என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த விக்னேஷ் குமார் வயது (20), என். ஜி. ஓ. காலனி அருகே உள்ள வெள்ளாளன் விளையை சேர்ந்த நவீன் (22), மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்த தானு (24) என்பது தெரியவந்தது. அவர்கள் கையில் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்த போது 300 கிராம் கஞ்சா எந்தவித அரசு அனுமதி இன்றி அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா என்னும் போதை பொருளை பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.        உடனே 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்து மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது. மேலகிருஷ்ணன்புதூரை சேர்ந்த தானு அங்கிருந்து போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடி விட்டான். விக்னேஷ்குமாரையும், நவீனையும் கைது செய்து காவல் நிலையம் கொண்டுவரப்பட்டனர்.           விக்னேஷ்குமார், நவீன், தானு ஆகிய மூன்று பேர் மீதும் சுசீந்திரம் போலீஸ் வழக்கு பதிவு செய்து  கைது செய்யப்பட்டுள்ள விக்னேஷ்குமாரையும், நவீனையும் நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய தானுவை தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வருகின்றனர்.

Similar News