கிணற்றில் குளிப்பதில் தகராறு: அண்ணன், தம்பியை தாக்கிய 2 பேர் கைது
போலீசார் நடவடிக்கை;

சேலம் மாவட்டம் இரும்பாலை அழகு சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகன் சந்துரு (வயது 22). இவரது தம்பி அஜய். அண்ணன், தம்பி 2 பேரும் கீரைபாப்பம்பாடியில் உள்ள ஒரு கிணற்றில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த சாய் பிரகாஷ் (வயது 24), சுதாகரன் (26) ஆகியோர் வந்தனர். அவர்களுக்குள் கிணற்றில் குளிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் சாய்பிரகாஷ் உள்ளிடட 2 பேரும், சந்துரு, அஜயை தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாய் பிரகாஷ், சுதாகரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.