மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது!
வேலூரில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;
வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர் சல்மான்கான் (31). கடந்த 21-ந்தேதி இவரது மோட்டார் சைக்கிளை புதிய பேருந்து நிலையத்தில் மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து அவர் வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மோட்டார் சைக்கிளை திருடிய கொணவட்டம் மதினாநகரை சேர்ந்த அக்தர் (24), முபாரக் (23) ஆகியோரை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.