அரக்கோணம் ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்-2 பேர் கைது

அரக்கோணம் ரயில் நிலையத்தில் கஞ்சா பறிமுதல்-2 பேர் கைது;

Update: 2025-08-05 04:46 GMT
அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்களில் வட மாநிலங்களில் இருந்து சிலர் கஞ்சா கடத்துவதாக அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரோகித் குமார், சப்-இன்ஸ் பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் 2 குழுவினர், ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்களிலும், பிளாட்பாரங்களிலும் சோதனை நடத்தினர். 1-வது பிளாட்பாரம் அருகே சந்தேகிக்கும் வகையில் பெரிய டிராலி பையுடன் 2 வாலிபர்கள் சுற்றித் திரிந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் பால் (வயது 27) மற்றும் இப்ராகிம் கலீல் உல்லா (25) என்பது தெரிய வந்தது. பையை சோதனை செய்ததில் அதில் 15 பண்டல்களாக சுமார் 15 லட்சம் மதிப்பிலான 30 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.இதனை அடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து, 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Similar News