ஓசூர்: சுடு தண்ணீரில் விழுந்த 2½ வயது ஆண் குழந்தை உயிரிழப்பு.

ஓசூர்: சுடு தண்ணீரில் விழுந்த 2½ வயது ஆண் குழந்தை உயிரிழப்பு.;

Update: 2025-08-06 00:29 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஈச்சங்குப்பத்தை சேர்ந்த வர் சிலம்பரசன், டிரைவர். இவர் ஓசூர் டி.வி.எஸ். நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் இவருக்கு 2½ வயதில் பைரவன் என்ற மகன் இருந்தான். கடந்த 31-ஆம் தேதி அன்று குழந்தை வீட்டின் குளியல் அறையில் வைத்திருந்த வெந்நீரில் தவறி விழுந்தான். இதில் படுகாயம் அடைந்த பைரவனை பெற்றோர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தான். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News