கலவை அருகே வாகனம் மோதி 2 பெண்கள் பலி
கலவை அருகே வாகனம் மோதி 2 பெண்கள் பலி;
கலவையை அடுத்த கணியனூர் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 50), மாற்றுத்திறனாளி. இவர் தனது மூன்று சக்கர ஸ்கூட்டரில் கணியனூர் கிரா மம் ரோட்டு தெருவை சேர்ந்த சரோஜா (65), அதே பகுதியை சேர்ந்த ஜெகதாம்பாள் (67) ஆகிய இருவரும் கலவைக்கு சொந்த வேலையாக சென்று விட்டு வேலை முடிந்தவுடன் ஊருக்கு திரும்பினர்.கலவை மின்சார அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் தாமோதரன் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் ஜெகதாம்பாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார்.சரோஜா, தாமோதரன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கலவை இன்ஸ்பெக்டர் கவிதா, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் காந்தி ஆகியோர் காயம் அடைந்த தாமோதரன், சரோஜா ஆகியோரை கலவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்னர் சரோஜா மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.